செவ்வாய், 11 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 மார்ச் 2025 (09:31 IST)

தேர்தலுக்கு பிறகு அதிமுக எங்கள் கையில்.. பாஜகவோடுதான் கூட்டணி! - டிடிவி தினகரன் உறுதி!

எடப்பாடி பழனிசாமி கையில் உள்ள அதிமுக, தேர்தலுக்கு பின்னர் தங்கள் கைகளுக்கு வரும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

 

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உடல்நலம் பாதித்து உள்ள நிலையில் சசிக்கலா, டிடிவி தினகரன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். நேற்று வைத்திலிங்கத்தை சந்தித்து நலம் விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் “எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை உள்ளதால் அதிமுக பலவீனம் அடைந்து வருகிறது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அவர்கள் கூட்டணியோடு ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைப்பார்கள்.

 

எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தேர்தலுக்கு பிறகு கட்சியை மீட்கும் பொறுப்பு எங்கள் கைகளில் வந்து சேரும். தேசிய ஜனநாயக கூட்டணியே தொடரும்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K