திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 2 அக்டோபர் 2021 (15:50 IST)

ரைஸ் குக்கரை திருமணம் செய்த நபர்… 2வாரத்தில் விவாகரத்து!

இந்தோனேஷியாவில் ரைஸ் குக்கரை திருமணம் செய்துகொண்ட நபர் இரண்டே வாரத்தில் விவாகரத்தும் செய்துள்ளார்.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த கொய்ருல் அனம் என்ற இளைஞர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனது வீட்டில் இருக்கும் எலக்ட்ரிக் ரைஸ் குக்கரை திருமணம் செய்துகொண்டார். இது சம்மந்தமான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டிருந்தார். அதில் ‘எனது மனைவி அழகானவர், அதிகம் பேசாதவர், சொல்பேச்சு கேட்பவர், அன்பானவர், நன்கு சமைக்க தெரிந்தவர்’ எனக் குறிப்பிட்டு இருந்தார். இதனால் சமூகவலைதளங்களில் வைரலானார்.

இதையடுத்து இப்போது அந்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.