திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 நவம்பர் 2021 (23:13 IST)

கொரோனாவால் மனிதனின் சராசரி வயது குறைந்துள்ளது. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகிலுள்ள 31 நாடுகளில் மனிதனின் சராசரி ஆயுள் காலம் குறைந்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மொத்தம் 37 நாடுகளில் இது குறித்து ஆய்வு செய்யப்பட்ட நிலையில் 31 நாடுகளில் மனிதர்களின் வாழ்நாள் குறைந்துள்ளதாகவும் கொரோனா என்னும் கொடிய நோய் மனிதனின் வாழ்நாளை குறைத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
அமெரிக்கா ரஷ்யா பல்கேரியா போலந்து உள்பட பல மாநிலங்களில் மக்களின் இறப்பு விகிதம் கொரோனா பாதிப்புக்கு பின் அதிகரித்துள்ளதாகவும் அதேசமயம் நியூசிலாந்து, தைவான், உள்பட சில நாடுகளில் மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது