செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (15:34 IST)

குளிர் பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசி!!

குளிர் பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. 
 
இந்த தடுப்பூசிகளை குளிர் அறையிலோ அல்லது குளிர் பெட்டியிலோ வைத்து பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தடுப்பு மருந்தின் செயல்திறன் போய்விடும். இந்நிலையில் குளிர் பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
ஆம், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இது வைரசின் முனைப்பகுதியில் உள்ள புரோட்டினை கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
 
அறை வெப்பநிலையிலேயே 7 நாட்கள் வரை வைத்திருந்து இதை பயன்படுத்தலாம். மற்ற நோய்களுக்கான தடுப்பூசி உற்பத்திக்கும் இந்த வழிமுறையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.