1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 டிசம்பர் 2017 (15:19 IST)

12 வருடங்கள் ஊமையாக நடித்து பேசும் திறனை இழந்த நபர்...

தான் செய்த கொலையை மறைக்க ஊமையாக நடித்து, கடைசியில் பேசும் திறனையே ஒரு நபர் இழந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

 
சீனாவில் ஷீஜியாங்கில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் ஸெங்(33). இவர் தன்னுடையை மனைவி மற்றும் மாமனாரை கடந்த 2005ம் ஆண்டு கொலை செய்து விட்டு கிராமத்தை விட்டு வெளியேறினார். அதன் பின் தனது பெயரை மாற்றிக்கொண்ட அவர் வேறொரு மாகாணத்திற்கு சென்று அங்கு வேலை செய்தார். மேலும், தான் ஒரு ஊமை என நடித்து வந்தார். அதோடு, ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தந்தையானார்.
 
இந்நிலையில், ஸெங்கை கடந்த 12 வருடங்களாகவே தேடி வந்த போலீசார், கடைசியாக அவரை கண்டுபிடித்தனர். விசாரணையில் தான் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், தன்னால் பேசமுடியவில்லை. நான் ஒரு முட்டாள். எதையும் நான் சொல்லப்போவதில்லை என போலீசாருக்கு எழுதிக் காட்டியுள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 
 
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.