ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (22:16 IST)

கார்த்தியுடன் நடிப்பதை உறுதி செய்த பிரியா பவானி சங்கர்

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் பிரியா பவானி சங்கர். தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலமாக சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர்.

 
சின்னத்திரையில் 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் மூலமாக அனைவரது மனதிலும் இடம் பெற்றார். மேயாத மான்  படத்திற்கு பிறகு இயக்குநர் பாண்டியராஜ் நடிகர் கார்த்தியை வைத்து எடுக்கும் அடுத்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி  சங்கர் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்தன.
 
தற்போது இதனை உறுதிபடுத்தும் விதமாக ட்வீட் செய்துள்ளார் பிரியா. நேற்று இப்பட பூஜையின்போது பிரியா வரவில்லை, இதனால் இவர் படத்தில் இருந்து வெளியேறிவிட்டாரா என ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ரசிகர்களின் குழப்பத்தை  போக்க பிரியா தன்னுடைய டுவிட்டரில் கார்த்தி, பாண்டிராஜ் படத்தில் தான் நடிப்பதாகவும், சில காரணங்களால் பூஜைக்கு வர  முடியவில்லை என்று கூறியுள்ளார்.