செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (16:55 IST)

போலீஸாக நடிக்கும் ராய் லட்சுமி

கவர்ச்சியும் கைகொடுக்காததால் அதிரடி போலீஸாக நடிக்கப் போகிறார் ராய் லட்சுமி.
கர்நாடகத்தை சேர்ந்த ராய் லட்சுமி, ‘கற்க கசடற’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ள ராய் லட்சுமி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘அகிரா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார்.
 
அந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ராய் லட்சுமி, ‘ஜூலி 2’ மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால், அந்தப்  படம் தோல்வியைத் தழுவியது. இத்தனைக்கும் ஏகப்பட்ட கவர்ச்சியாக அந்தப் படத்தில் நடித்திருந்தார் ராய் லட்சுமி.
 
இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார் ராய் லட்சுமி. கவர்ச்சியும் கைகொடுக்காததால், இந்தப் படத்தில் அவர் போலீஸாக, அதிரடி வேடத்தில் நடிக்கிறாராம். இரண்டு பயங்கர சண்டைக் காட்சிகளும் இந்தப் படத்தில்  இருக்கிறதாம்.