ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 15 நவம்பர் 2023 (16:19 IST)

இந்தியப் படையை வெளியேற்றுவோம்: மாலத்தீவு அதிபர் அதிரடி அறிவிப்பு..!

மாலத்தீவில் இருந்து இந்திய படையை வெளியேற்றுவோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்திய படைக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டின் படையையோ மாலதிவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்க உள்ள முகமது மூயிஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிபராக தேர்ந்தெடுக்கபட்ட முகமது மூயிஸ் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அவர் சீனாவின் ஆதரவாளராக இருந்தாலும் சீன படையையும் தன்னுடைய நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்ற தேர்தலில்  இந்திய ஆதரவாளர் மற்றும் சீன ஆதரவு வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நடந்த நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாளராக அறியப்படும் முகமது சோலீ என்பவர் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து சீனாவுக்கு ஆதரவாக கருதப்படும் முகமது மூயிஸ் புதிய அதிபராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  அவர் மாலத்தீவில் உள்ள இந்திய படையை வெளியேற்றுவோம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva