1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2023 (17:58 IST)

இந்தியா- நியூ., அரையிறுதிப் போட்டி: மும்பை வான்கடேவில் குவிந்த பிரபலங்கள்

sachin -beckam
இந்தியாவில் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்றுகள் முடிவில், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் வெளியேறின.

இந்தியா, ஆஸ்திரேலியா,  நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

இந்த நிலையில், இன்று இந்தியா-   நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியைக் காண  முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம், முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ரிச்சர்ட்ஸ், பிரபல நடிகர் வெங்கடேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் இப்போட்டியை  நேரில் கண்டுகளித்து வருகின்றனர்.

இந்தியா முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், 23.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தற்போது கோலி 41 ரன்னுடனும், ஸ்ரேயாஷ் அய்யர் 3 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.