சுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக Retired Hurt ஆகி பெவிலியன் திரும்பினார்
அரைசதம் அடித்து அதிரடியாக விளையாடி வந்த சுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக Retired Hurt ஆகி பெவிலியன் திரும்பினார்.
இந்தியாவில் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்றுகள் முடிவில், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் வெளியேறின.
இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
இந்த நிலையில், இன்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இதில், இந்திய அணி 23.6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இப்போட்டியில் அரைசதம் அடித்து அதிரடியாக விளையாடி வந்த சுப்மன் கில்( 79 ரன்*) தசைப்பிடிப்பு காரணமாக Retired Hurt ஆகி பெவிலியன் திரும்பினார். அவர் உடல் நிலை சீரானதும் மீண்டும் விளையாடுவார் என கூறப்படுகிறது.
தற்போது கோலி 50 ரன்னுடனும், ஸ்ரேயாஷ் அய்யர் 14 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.