ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2024 (08:11 IST)

மலாவி நாட்டு துணை அதிபர் சென்ற ராணுவ விமானம் திடீர் மாயம்.. 9 பேர் நிலை என்ன?

மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா என்பவர் பயணம் செய்த விமானம் திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்த ஒன்பது பேரின் நிலை என்ன என்பது தெரியாததால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி என்ற நாட்டின் துணை அதிபர் நேற்று 9 பேர்களுடன் விமானத்தில் பயணம் செய்த நிலையில் அந்த விமானம் திடீரென மாயமாகியுள்ளது. மலாவி நாட்டின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான அந்த விமானத்தில் இருந்த ஒன்பது பேர் காலை 9.17 மணிக்கு தலைநகரிலிருந்து புறப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் ரேடார் தொடர்பை இழந்ததாக மலாவி நாட்டின் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மாயமான மலாவி விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாகவும் இதுவரை மாயமான விமானம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் மலாவி நாட்டின் துணை அதிபர் உட்பட ஒன்பது பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் கிழக்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva