செலவுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் மல்லையா! – பணத்தை விடுக்க மறுத்த லண்டன் நீதிமன்றம்!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:00 IST)
கடன் மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள விஜய் மல்லையாவிற்கு வழக்கு செலவுக்கு பணம் விடுக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்து வெளிநாடு தப்பியவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவரை லண்டன் போலீஸார் கைது செய்த நிலையில் இவர் மீதான வழக்கு இலண்டன் மற்றும் இந்தியா இரு நாடுகளிலும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இருநாடுகளிலும் நடந்து வரும் வழக்குகளில் வக்கீல் பணம் செலுத்த கூட தன்னிடம் பணம் இல்லை என்று லண்டன் நீதிமன்றத்தில் கூறியுள்ள மல்லையா, பிரான்சில் உள்ள 27 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்தை மட்டும் விற்க அனுமதி கோரியுள்ளார். அவரது மனுவை விசாரித்த லண்டன் நீதிமன்றம் பணம் விடுவிக்க மறுத்து உத்தரவிட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :