செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (08:22 IST)

ஹிட்லரின் நாஜிப்படைக்கு சமமானவர் ட்ரம்ப் ஆதரவாளர்கள்! – அர்னால்ட் ஆவேசம்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து பிரபல நடிகரும், முன்னாள் கவர்னருமான அர்னால்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் நடப்பு அதிபர் ட்ரம்ப்பை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ளாமல் ட்ரம்ப் தொடர்ந்து வாதம் செய்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் புகுந்து கலவரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள கலிபொர்னியாவின் முன்னாள் கவர்னரும், பிரபல நடிகருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேகர் “மக்கள் தேர்தல் மூலம் தங்கள் முடிவை தெரிவித்துவிட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப் சதிக்காரர்களுடன் கூட்டு சேர்கிறார். ட்ரம்பின் ஆதரவாளர்கள் செயல்பாடு ஹிட்லரின் நாஜி படையை ஒத்ததாக இருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் மோசமான அதிபராக ட்ரம்ப் உள்ளார்” என கூறியுள்ளார்.