போர்ச்சுக்கல் ஜனாதிபதிக்கு கொரோனா! – தேர்தல் சமயத்தில் அதிர்ச்சி!
போர்ச்சுக்கலில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடப்பு ஜனாதிபதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருபவர் மார்சிலோ ரெபேசோ டிசோசா. 76 வயதான இவரின் பதவிக் காலம் முடிய உள்ள நிலையில் எதிர்வரும் 26ம் தேதி போர்ச்சுக்கலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் டிசோசா போட்டியிட இருந்தார்.
இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டதால் மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.