கடலில் வீசிப்பட்ட கடிதம்; 29 ஆண்டுகளுக்கு பின் கரை சேர்ந்த நிகழ்வு!!
சிறுமி ஒருவர் 29 ஆண்டுகளுக்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி அதனை ஒரு பாட்டிலில் வைத்து கடலில் வீசியுள்ளார். அந்த கடிதம் தற்போது வேறொருவருக்கு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் எடிஸ்டோ கடற்கரைக்கு சென்ற 8 வயது சிறுமியான மிரண்டா அப்போது ஒரு பேப்பரில் தனது பெயர், வீட்டு முகவரி ஆகியவற்றை எழுதி ஒரு பாட்டிலில் போட்டு கடலில் வீசியுள்ளார். இந்த சம்பவம் 1988 ஆம் ஆண்டு நடந்துள்ளது.
இந்த பாட்டில் தற்போது 29 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த கடிதம் ஏந்திய பாட்டில் ஜோர்ஜியாவில் உள்ள தீவு பகுதியில் கிடைத்துள்ளது.
இந்த கடிதத்தை கைப்பற்றிய டேவிட், லிண்டா தம்பதியினர் இது குறித்து தங்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவை பார்த்த கடிதம் எழுதிய மிரண்டா தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.