திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (10:39 IST)

வங்கக் கடலில் புயல் ; தீபாவளி தப்பிக்குமா?

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகமெங்கும் தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


 

 
தீபாவளி பண்டிகை வருகிற 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் தீபாவளியன்று மழை பெய்வது வழக்கமான ஒன்றுதான்.  ஆனால், இந்த முறை தீபாவளியன்று புயலை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அக்.15ம் தேதியன்று வங்க கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அது மேலும் வலுவடைய அதிக வாய்ப்புள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
 
அப்படி அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின் அக்.18ம் தேதி அது புயலாகவும் மாற வாய்ப்பிருக்கிறது என நம்பப்படுகிறது. ஆனால், அது புயலாக மாறுமா என்பது அக்.16ம் தேதி தெரிந்துவிடும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
புயலாக மாறினால், அது ஒடிசா அல்லது ஆந்திராவின் விசாகப்படினத்தை தாக்கும் எனவும், புயலாக மாறவிடில், 18ம் தேதிக்கு பின் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.