புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2019 (15:12 IST)

ஈஷாவுக்கு கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெற்ற டி காப்ரியோ !

ஈஷாவின் காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு தான் கொடுத்த ஆதரவை ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ திரும்பப் பெற்றுள்ளார்.

காவிரி நதியை மீட்க வேண்டும் என்பதற்காக ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ்  காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஆரம்பித்து மோட்டார் சைக்கிள் பேரணிகளை நடத்தி வருகிறார். இதற்கு தமிழக அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த இயக்கத்தின் மூலம் நிதி திரட்டி 242 கோடி மரக்கன்றுகளை நட இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜக்கியின் இந்த இயக்கத்துக்கு ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் லியானார்டோ டி காப்ரியோ ஆதரவு தெரிவித்தது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆனால் ஈஷா மையம் பழங்குடிகளின் இன மக்களின் இடங்களையும், காடுகளையும் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டது எனவும் குற்றச்சாட்டுகள் உள்ளதையும் அதனால் அவருக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என உலகளவில் டி காப்ரியோவுக்கு அறிவுரைகளை வழங்கினர். இதனையடுத்து டி காப்ரியோ ஈஷா பேரணிக்கு வழங்கிய தனது ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளார்.