எவ்ளோ முயற்சி பண்ணியும் முடியல.. புல்வெளியில் பாய்ந்த விமானம்! – பிலிப்பைன்சில் அதிர்ச்சி!
தென்கொரியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் வந்த விமானம் மோசமான வானிலையால் புல்வெளியில் பாய்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவின் இன்சியான் நகர விமான நிலையத்திலிருந்து கொரியன் ஏர் விமானம் ஒன்று 173 பேருடன் பிலிப்பைன்சின் மெக்டன் செபு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. விமானம் பிலிப்பைன்சில் நுழைந்தது முதலே மழை காரணமாக மோசமான வானிலை நிலவியுள்ளது.
இதனால் விமானத்தை பிலிப்பைன்சின் லபு லபு நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு முறை விமானத்தை தரையிறக்க விமானி விமான நிலையத்தை நெருங்கியும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனால் வட்டமடித்து திரும்பிய விமானம் மூன்றாவது முறையாக தரையில் இறங்கியது. ஆனால் ஓடுதளம் மழை காரணமாக தண்ணீராக இருந்ததால் பாதை மாறி விமானத்தின் புல்வெளி பாதையில் பாய்ந்தது விமானம். இதனால் தரையிரங்கும் சக்கரங்கள் உடைந்து விமானத்தின் முன்பாகம் தரையோடு மோதியது.
உடனடியாக அங்கு விரைந்த மீட்பு படையினர் பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதை தவிர உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.
Edited By Prasanth.K