1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2022 (12:20 IST)

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர் திமுக குலைத்துள்ளது: ஓபிஎஸ்

OPS
தமிழ்நாட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்துள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்னும் அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இதுகுறித்து கூறிய போது தமிழ்நாட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்து உள்ளது என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தீவிரவாதம் பயங்கரவாதம் கொலை கொள்ளை வன்முறை ஆகியவை தலைவிரித்து ஆடுகிறது என்றும் தமிழ்நாட்டில் அமைதி உறுதி செய்யப்பட்டால் தான் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியிலும் பொருளாதார வளர்ச்சியை முன்னேறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
 
Edited by Mahendran