வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (21:04 IST)

பிலிப்பைன்ஸில் கப்பலில் தீப்பிடித்து விபத்து. 80 பயணிகள் மீட்பு !

philippines ship fire
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில்  கப்பல் ஒன்று தீப்பிடித்த எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டி ஓரிய்ண்டல் மிண்டோரோ மாகாணம கபலன் என்ற நகரில் இருந்து ஒரு பயணிகள் கப்பல் 49 பயணிகள் மற்றும் 38 பணியாளர்களுடன் தலை நகர் மணிலாவின் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்து.

அப்போது, துறைமுகத்தைக் கப்பல் நெருங்கியதும் திடீரென்று கப்பலில் தீ பிடித்தது. கரையில் இருந்து கப்பல் ஒரு கிமீ தொலையில் இருந்த நிலையில், கப்பலில் வேகமாகத் தீ பற்றியதால், அதிலிருந்து பயணிகளும், பணியாளர்களும் உடனடியாக கடலில் குதித்தனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 80 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர், இதில் 2 பேரை காணவில்லை எனவும், அவர்கள் கப்பலில் சிக்கினார்களா? இல்லை கடலில் குதிக்கும்போது, அசம்பாவிதம் நடந்ததா என விசாரித்து வருகின்றனர்.