1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (10:23 IST)

வடகொரியாவில் கொரோனா: ராணுவத்திற்கு கிம் பிறப்பித்த உத்தரவு!

வடகொரியாவில் ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என உத்தரவு.  

 
சர்வாதிகாரியாக வட கொரியாவில் ஆட்சி நடத்திவரும் கிம், அந்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகுக்கு தெரியாமல் வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு என வடகொரியா அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது 3 நாட்களில் மட்டும் எட்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை 12 லட்சம் பேர் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் உயிரிழப்புகளில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்ற விவரத்தை வடகொரியா இதுவரை அறிவிக்கவில்லை. 
 
இந்நிலையில், அரசு கையிருப்பில் உள்ள மருந்துகளை மருந்தகங்களுக்கு உடனடியாக அனுப்புமாறும், மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்படவேண்டும் என்றும் அரசியல் விவகாரகுழு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் அந்த உத்தரவை சுகாதார அதிகாரிகள் பின்பற்றவில்லை. 
 
எனவே வடகொரியாவில் ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.