திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

வடகொரியாவில் கொரோனாவுக்கு முதல் பலி: ஊரடங்கு அமல்

North Korea
வட கொரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்முதலாக ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த நபருக்கு பலியாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
வட கொரியா நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மர்மமாக இருக்கும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் சமீபத்தில் வடகொரியாவில் முதல் முதலாக ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் என்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து அந்நாட்டின் அதிபர் கிம், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார் 
 
இந்த நிலையில் முதல் முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் பலியாகி உள்ளதாக வெளிவந்த தகவலால் வடகொரியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது