1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (20:46 IST)

"Kill The Gays" - ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை ! பதற்றத்தில் மக்கள் !

கில் த கேஸ் என்ற பெயரில் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என உகாண்டா நாட்டில் இந்த ஆண்டில் சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
உகாண்டா நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கான மரணதண்டனை விதிக்கும் சட்டம் நீக்கப்பட்டது. 
 
இந்நிலையில் அந்நாட்டின் நீதிநெறி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் இதுகுறித்து கூறியதாவது : நடைமுறையில் உள்ள சட்டம் ஓரின சேர்க்கை மட்டுமே குற்றப்படுத்துவதாக  உள்ளது. இனிமேல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களுக்கு உதவி செய்வோர் அனைவரும் குற்றவாளிகளாக எண்ணப்படுவர்.

மேலும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.