மனைவியை கொன்று ப்ரீசரில் வைத்திருந்தவர் நபர் : பகீர் சம்பவம்
சீனாவில் மனைவியை கொன்று, அவரது உடலை 106 நாட்கள் ப்ரீசலில் மறைத்து வைத்திருந்த நபரை சமீபத்தில் காவல்துறை கைது செய்தது .தற்போது அவருக்கு ஷாங்காய் கோர்ட் மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.
சீனாவில் ஹாங்கோ என்ற பகுதியில் வசித்து வந்தவர். ஜூ சியாயோங் (30). அங்குள்ள ஒரு துணிக்கடையில் இவர் பணியாற்றி வந்தார். இவரது மனைவி யாங் லிப்பிங்(30). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இந்த தம்பதியர்க்கு திருமணம் ஆனதில் இருந்தே கருத்துவேறுபாடுகள் அதிகமானதாக இருந்துள்ளது. அதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளன . இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் மோதம் முற்றி சண்டை நடந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த சியாயோங், லிப்பிங்கின் கழுத்தை நெறித்துக் கொன்றாதாகத் தெரிகிறது. பின்னர் இதனை மறைக்க தன் வீட்டில்லேயே லிப்பிங்கின் உடலை மறைத்து வைக்க ஒரு ப்ரீசர் ஒன்றை வாங்கியுள்ளார்.
அதில், தான் கொன்ற மனைவியின் உடலை மறைத்துவிட்டு, இந்த சம்பவத்தை மறக்கவே வெளியில் சென்று சுற்றித்திரிந்துள்ளார். பின்னர் தன் மனைவியை அக்கம் பக்கத்து வீட்டார் இவரிடம் விசாரிக்கவே , பதறிப்போன சியாயோங் போலீஸிடம் சென்று தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஷாங்காய் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது ஜூவிற்கு மரண தண்டனை விதிப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து லிப்பிங் மேல் முறையீடு செய்தார். ஆனால் இந்த தண்டனையை மாற்றமுடியாது என்று இறுதியாகத் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.