ஒருநாள் இரவில் உருகுலைந்த கென்யா: 60 பேர் பலி!
கென்யாவில் பெய்து வந்த மழையால் ஏற்பட்ட மிகப்பெரும் நிலச்சரிவில் சிக்கி பல மக்கள் உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உகாண்டா எல்லைப்பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாலங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.
இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட இதுவரை 60 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை தன்னார்வலர்களும், ராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியின் கவர்னர் “நேற்றைய இரவு போன்ற ஒரு மோசமான இரவை நாங்கள் சந்தித்ததில்லை” என கூறியுள்ளார்.