ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (10:30 IST)

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய வேட்பாளர் ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ் போட்டியிட திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது என்பதும் இருவரும் சமீபத்தில் நேருக்கு நேர் விவாதம் செய்த நிலையில் அதில் ஜோபைடன் வாதிட திணறியதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் ஜோ பைடனுக்கு  வாதிடம் திறன் மோசமாக இருப்பதால் அவர் வெற்றி பெறுவது கடினம் என்றும் எனவே அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று அவரது கட்சிக்குள் குரல் எழுந்து வருகிறது.
 
இந்த நிலையில் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் களமிறக்கப்படுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் நேருக்கு நேர் மோதி உள்ளனர் என்பதும் அதேபோல் மீண்டும் மோத வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது ஜோபைடனுக்கு  81 வயது ஆவதால் அவரது வயதும் அமெரிக்க அதிபர் பதவிக்கு சரியாக இருக்காது என்றும் அவருடைய ஜனநாயக கட்சி கருத்து தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran