1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (17:07 IST)

அமெரிக்காவில் கார் விபத்து.... கோவையைச் சேர்ந்த 4 பேர் பலி!

accident
அமெரிக்காவில் உள்ள தம் மகன்களைப் பார்க்கச் சென்ற கோவையைச் சேர்ந்த தம்பதியர் அங்கு நடந்த கார் விபத்தில் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டத்தில் வசித்து வந்த  நாக ராஜன்( 53),  இவர் தேனியைப் பூர்விகமாகக் கொண்டவர் எனினும் கோவையில் செட்டில் ஆகிவிட்டார் எனக் கூறப்படுகிறது.

இவரது மனைவி விஜயலட்சுமி; இந்தத் தம்பதியர்க்கு,  ஹதீஸ்(24)ம் தினேஷ்(23) ஆகிய இரண்டு மகன் கள் உள்ளனர. இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.

இரு மகன் களைப் பார்க்க, அமெரிக்காவுக்குச் சென்ற  நாக ராஜன்- விஜயலட்சுமி தம்பதி, அரிசோனா பகுதியில் நடந்த கார் விபத்தில் சிக்கினர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் பலிகினர். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.