உக்ரைன் விவகாரம்: ஜோ பைடன் – புதின் பேச்சுவார்த்தை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடினார்.
ரஷ்யாவிற்கு அருகிலுள்ள உக்ரைன் நாட்டின் மீது இத்தனை ஆண்டுகள் ரஷ்யா ஆதிக்கம் செலுத்திய நிலையில், தற்போது, உக்ரைன் நாடு ஐரோப்பியாவுடன் கூட்டு சேரவுள்ளதாக அறிவித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது தங்கள் நாட்டுப் படைகளை உக்ரைன் நாட்டு எல்லையில் நிறுத்தியது.
இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் புடினுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுத்தினார்.