வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2023 (07:31 IST)

இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்.. செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பு

வயதான இரண்டு இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாகவும், விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
ஏற்கெனவே 2 அமெரிக்க பெண்களை விடுத்த ஹமாஸ், தற்போது இரண்டு வயதான இஸ்ரேலிய பெண்களை விடுவித்துள்ளது. எகிப்து  மற்றும் கத்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் அடுத்தடுத்து பணயக்கைதிகள் விடுவிக்கபட்டு வருகின்றனர். 
 
 இருப்பினும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது. 
 
பேச்சு வார்த்தையின் அடிப்படையில், மனிதாபமான அடிப்படையில் தான் பெண் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் போரில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva