திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 26 மே 2018 (12:43 IST)

டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு ரத்து: ஜப்பான் அதிபர் வருத்தம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது என ஜப்பான் பிரதமர் அபே தெரிவித்துள்ளார்

 
 
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார். இதனால் இரு நாடுகளுக்கும் மத்தியில் மோதல் போக்கு நிலவி வந்தது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் டுவிட்டரிலும் கருத்து மோதல்களை வெளிப்படுத்தினர்.
 
இந்த நிலையில் இரு நாட்டு அதிபர்களும் வரும் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் பேச்சு வார்த்தை நடத்துவதாக இருந்தது. இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் அணு ஆயுத கொள்கை குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் டிரம்ப் வடகொரியா அதிபருடனான சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
 
இதற்கு ஜப்பான் அதிபர் அபே வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, அமெரிக்க அதிபர்  டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்றார். மேலும், இந்த சந்திப்பு மீண்டும் நடப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.