டிரம்ப் மனைவி மருத்துவமனையில் அனுமதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிரம்ப் அதிபராக பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது அமெரிக்க மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டு வந்த திட்டங்களை, டிரம்ப் ஒடுக்குவதிலேயே முனைப்பு காட்டி வந்தார்.
டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப். 48 வயதாகும் மெலானியா கடந்த சில தினங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் நோயின் தீவிரம் அதிகமாகவே, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்வதற்காக வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின் முழு ஓய்வு எடுக்க மெலானியாவை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.