புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (12:29 IST)

சாலையிலும் போகும்.. தண்டவாளத்திலும் போகும்! – ஜப்பானின் புதிய பேருந்து!

சாலையிலும், தண்டவாளத்திலும் பயணிக்க கூடிய பேருந்தை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளனர்.

போக்குவரத்து சாதனங்களில் புதிய புதிய மாற்றங்களை செய்து புதிய முயற்சிகளை ஜப்பான் மேற்கொண்டு வருகிறது. ஜப்பானின் புல்லட் ரயில்கள் உலக பிரபலம். இந்நிலையில் தற்போது போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் சாலை மற்றும் தண்டவாளம் இரண்டிலும் செல்லக்கூடிய பேருந்தை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானில் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் இந்த பேருந்து சேவை பயன்படுத்தப்பட உள்ளது. பேருந்துகள் சாலைகளில் சுற்றி செல்லும் தொலைவை விட தண்டவாளங்களின் தொலைவு மிகவும் குறைவு அதே சமயம் ரயில்களும் அதிகம் இல்லாத பகுதிகளாக இருக்கும்பட்சத்தில் இந்த பேருந்து தண்டவாளத்தில் பயணித்து நேரத்தை மிச்சப்படுத்தும். சாலையில் 100 கி.மீ வேகத்திலும், தண்டவாளத்தில் 80 கி.மீ வேகத்திலும் இந்த பேருந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.