1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (22:12 IST)

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்பதும் அதே போல் சுனாமி ஏற்படுவது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சற்று முன்னர் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
அதாவது ரிக்டர் அளவில் 6.1 என்ற அளவில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
அது மட்டுமின்றி ஜப்பான் நாட்டில் பூகம்பம் வந்தால் உடனே சுனாமி எச்சரிக்கை விடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை சுனாமி எச்சரிக்கை விடப்படுவது குறித்து புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளி வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஜப்பான் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது