திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (08:52 IST)

வெடித்து முடிக்காத எரிமலை; தொடர்ந்து நிலநடுக்கம்! – அதிர்ச்சியில் ஸ்பெயின்!

ஸ்பெயினின் லா பால்மா எரிமலை தொடர்ந்து வெடித்து வருவதால் ஏற்படும் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உள்ளனர்.

ஸ்பெயினின் கனெரி தீவில் உள்ள லா பால்மா எரிமலை கடந்த செப்டம்பர் 19ம் தேதி வெடிக்க தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு வார காலமாக தொடர்ந்து தீக்குழம்புகளை வெளியிட்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் பல இடங்களில் அடிக்கடி நிலநடுக்கமும் ஏற்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மற்றும் 34 கிலோ மீட்டர் அளவிலான சாலைகளை எரிமலை குழம்பு மூழ்கடித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கெனரி தீவின் பிராந்திய தலைவர் ஏங்கல் வெக்டர் “எரிமலையின் சீற்றம் இன்னும் முடிவடையவில்லை. இது இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது கூட எங்களுக்குத் தெரியாது. நாங்கள் இயற்கையின் கைகளில் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.