புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 மே 2020 (08:53 IST)

யாரும் உள்ள வரக்கூடாது; இந்தியா உள்ளிட்ட 199 நாடுகளுக்கு ஜப்பான் தடை!

உலகமெங்கும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை சேர்ந்தவர்கள் ஜப்பானுக்கு பயணம் செய்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால பல லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.  அனைத்து நாடுகளுக்கும் இடையேயான விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

ஜப்பானில் 16,628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 13,612 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 851 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஜப்பானின் உள்நாட்டு வணிகம் மற்றும் தொழில்களுக்கு மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் வெளிநாட்டு போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உலகம் முழுவதிலும் 188 நாடுகளை சேர்ந்தவர்கள் ஜப்பான் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியா, ஆப்கானிஸ்தான், அர்ஜெண்டினா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் ஜப்பானிய குடிமக்கள் இந்த 199 நாடுகளுக்கும் பயணிக்கவும் தடை தொடர்கிறது.