1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (16:45 IST)

ஜப்பான் மீது போர் தொடங்கும் வடகொரியா? – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு!

North Korea
ஜப்பான் மீது வடகொரியா போர் தொடரும் ஆபத்து உள்ளதாக நாட்டு மக்களை ஜப்பான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா கடந்த 10 நாட்களுக்குள் 5 முறை பாலிஸ்டிக் உள்ளிட்ட அபாயகரமான ஏவுகணைகளை சோதனை நடத்தியுள்ளது. இதனால் அண்டை நாடான ஜப்பான் மீது வடகொரியா போர் தொடுக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்புகளுக்கிடையே ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு ஜப்பான் அரசு எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் அபாயம் காரணமாக ஜப்பானில் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Edited By: Prasanth.K