1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (14:06 IST)

'ஆதிபுரூஷ்’ படக்குழுவினர்களுக்கு அமைச்சர் திடீர் எச்சரிக்கை!

adipurush
பிரபாஸ் நடித்த 'ஆதிபுரூஷ்’ என்ற திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் இந்த டீசரில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆதிபுரூஷ்’ என்ற திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்பது கோச்சடையான் படம் போல் இருக்கிறது என்று பலர் கிண்டலடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 'ஆதிபுரூஷ்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும் குறிப்பாக அனுமன் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் உடனடியாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்போம் என்றும் மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார் 

Edited by Siva
 
இந்த எச்சரிக்கை காரணமாக படக்குழுவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது