வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஜூன் 2024 (14:09 IST)

இனிமேல் நாங்கள் மெலோடி டீம்.. இத்தாலி பிரதமருடன் பிரதமர் மோடியின் செல்பி..!

ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ள நிலையில் அங்கு அவர் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐம்பதாவது ஜி 7 உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி உட்பட பல உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட செல்வி புகைப்படம் அவருடைய சமூக பல தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் வீடியோ ஒன்றை பதிவு செய்து மெலோடி டீமிடம் இருந்து ஹலோ என்று கூற பின்னால் பிரதமர் மோடி சிரிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. மெலோடி என்பதை மெலோனி என்பதன் முதல் எழுத்தும், மோடி என்பதன் கடைசி எழுத்தையும் அவர் சேர்த்து பகிர்ந்து உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உடன் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட செல்பி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு செல்பி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran