வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 15 ஜூன் 2024 (12:52 IST)

பெரும்பான்மை இல்லை.! மோடி ஆட்சி நிச்சயம் கவிழும்..! மல்லிகார்ஜுன கார்கே கணிப்பு..!!

mallikarjuna karka
மத்தியில் பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
 
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை விட 32 இடங்கள் குறைவாக அக்கட்சி பெற்றுள்ளது. அதேநேரத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. 
 
இந்நிலையில்  மத்தியில் அமைந்துள்ள கூட்டணி ஆட்சி கவிழும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர்.  தற்போதைய மத்திய அரசு சிறுபான்மை அரசு என்றும் இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும் தெரிவித்தார்.  

 
கூட்டணி அரசு என்பது கிச்சிடி அரசு என்றும்,  கூட்டணி அரசில் ஆட்சியாளர்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் பிரதமர் ஏற்கனவே கூறியதை மல்லிகார்ஜுன கார்கே சுட்டி காட்டினார்.