வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (17:37 IST)

பிரபல நடிகர் கென்னத் மிட்செல் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி

Kenneth Mitchell
பிரபல நடிகர் கென்னத் மிட்செல்  அரிவகை நோயினால்  பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 24 ஆம் தேதி காலமானார்.
 
கென்னத் அலெக்சாண்டர் மிட்செல் ஒரு கனடிய நடிகர் ஆவார். இவர்  சிபிஎஸ் தொலைக்காட்சி தொடரான ஜெரிகோவில் (2006- 2008 ) எரிக் கீரினாக நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.
 
இதையடுத்து, ஸ்டார் ட்ரெக் டிஸ்கவரி (2017-2021) -ல் பல்வேறு கதாப்பாத்திரங்களை சித்தரிப்பதற்காக அறியப்பட்டார்.
 
அதன்பின்னர், 2004 ஆம் ஆண்டு வெளியான ஸ்போர்ட்ஸ் பயோபிக் மிராக்கிள்-ல், ரால்ப் காக்ஸ்ஸாகவும்,  கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் மார்வெல் படத்தில் ஜோசப் டான்வர்ஸாகவும்,காரெல் டான்வெர்ஸுக்கு தந்தையாக நடித்திருந்தார்.
 
49 வயதான கென்னத் மிட்செல்  Amyotropic lateral sclerosis  என்ற அரியவகை   நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 5ஆண்டுகளால் இந்த நோயிலான பாதிக்கப்பட்டு போராடி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அவர் காலமானார்.  
 
அவரது மறைவுக்கு ஹாலிவுட் சினிமாத்துறையினர் இரங்கல் கூறி வருகின்றனர்.