புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (08:39 IST)

அப்படி ஒரு அஜால் குஜால் கேமே கிடையாதா? – உண்மையை உடைத்த ஸ்வீடன்!

Sweden
ஸ்வீடன் நாட்டில் பாலியல் உறவை விளையாட்டாக அங்கீகரித்து சாம்பியன் போட்டி நடைபெற உள்ளதாக வெளியான தகவல்களை ஸ்வீடன் அரசு மறுத்துள்ளது.



ஸ்வீடன் நாட்டில் பாலியல் உறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியான தகவல் பலரையும் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. அதை தொடர்ந்து ஸ்வீடனில் உடலுறவுக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளதாகவும் 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்ள உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவியது.

அதை பகிர்ந்த பலரும் இந்த போட்டி எந்த சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது? தமிழ் கமெண்ட்டரி உண்டா? என ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த விளையாட்டு குறித்த தகவல்கள் போலியானவை என ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது.

ஸ்வீடனில் பாலியல் உறவு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் போலியானவை என அந்நாட்டு விளையாட்டுத் துறை அறிவித்துள்ளது. ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பில் செக்ஸ் கூட்டமைப்பு என்றும் எதுவும் இல்லை, அதில் உறுப்பினர்கள் என்றும் யாரும் இல்லை என ஸ்வீடன் விளையாட்டு துறை விளக்கமளித்துள்ளது.

Edit by Prasanth.K