திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 மே 2020 (13:33 IST)

திசைமாறிய ஏவுகணை! வெடித்து சிதறிய போர் கப்பல் – ஈரானில் பதற்றம்!

ஈரான் போர்க்கப்பல்கள் ஓமன் வளைகுடாவில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் ஏவுகணை திசை மாறியதால் போர் கப்பல் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் போர் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அப்போது ஒரு போர்க்கப்பல் ஏவுகணை ஒன்றை தண்ணீருக்கு அடியில் இலக்கு நிர்ணயித்து ஏவ முயற்சித்துள்ளது. அப்போது ஏற்பட்ட குளறுபடிகளால் நீண்ட தொலைவு கடந்து செல்ல வேண்டிய ஏவுகணை குறுகிய எல்லைக்குள் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது இலக்கில் கொனராக் எனப்படும் மற்றொரு ஈரான் போர் கப்பலும் பயிற்சியில் இருந்த நிலையில் தவறுதலாக ஏவுகணை கொனராக் கப்பலை தாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் சேதத்தை சந்தித்த கொனராக் கப்பல் மெல்ல கடலில் மூழ்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.