செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜனவரி 2020 (10:15 IST)

விமானத்தை தவறுதலாக சுட்டு விட்டோம்! – உண்மையை ஒத்துக்கொண்டது ஈரான்!

ஈரானிலிருந்து உக்ரைன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான நிலையில் அது தவறுதலாக சுடப்பட்டதாக ஒத்துக் கொண்டுள்ளது ஈரான்.

ஈரான் தளபதி சுலைமானி அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ராக்கெட் மூலம் தாக்கியது ஈரான். அதே நாளில் டெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானது.

தொழில்நுட்ப கோளாறால் விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் ஈரான் ஊடகங்கள் விமானம் ஈரான் ராக்கெட்டுகளால் தவறுதலாக தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.