”ஈரான் மீது போர் வேண்டாம்”.. வீதியில் இறங்கி போராடிய அமெரிக்கர்கள்
ஈரான் மீது போர் தொடுக்க வேண்டாம் என நூற்றுக்கணக்கான நியூயார்க் மக்களை வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
ஈரானுடன் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து நீண்டகாலமாக அமெரிக்காவுக்கு மோதல் இருந்துவருகிறது. இதனிடையே சமீபத்தில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா குண்டுவீசி கொன்றது. இதனை தொடர்ந்து ஈரானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியது.
இச்சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் உலகப்போர் வந்துவிடுமோ என உலக மக்கள் அச்சப்படுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் நூற்றுக்கணக்கான மக்கள் ”ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டாம், ஈரான் மீது போர் தொடுக்க வேண்டாம், நாங்கள் அமைதியை விரும்புகிறோம்” போன்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.