செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By siva
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (14:42 IST)

ஈரானில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 31 பேர் பலி

hijaab
ஈரானில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 31 பேர் பலி
ஈரானில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் போராட்டம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்த போராட்டத்தில் 31 பேர் பலியாகியுள்ளதாக வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஈரானில் ஏழு வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் உடை அணிவது கட்டாயம் என்று அரசு கூறப்பட்ட நிலையில் ஹிஜாப் அணியாத பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் போலீசாரால் படுகொலை செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது
 
இதனை அடுத்து ஈரான் அரசுக்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதாகவும் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன 
 
ஈரான் பெண்களுக்கு ஆதரவாக பல நாடுகளில் இருந்தும் போராட்டத்தில் களத்தில் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது