1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 17 நவம்பர் 2022 (07:37 IST)

ஹிஜாப் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு: ஈரானில் 5 அப்பாவி பொதுமக்கள் பலி!

iran protest
ஈரானில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணிவதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக 5 அப்பாவி பொதுமக்கள் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
ஈரான் நாட்டின் நகரமான இசே என்ற நகரில் நேற்று ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில்  5 பேர் கொல்லப்பட்டதாகவும் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உள்பட 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஹிஜாபுக்கு எதிரான போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து அரசுக்கு தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
துப்பாக்கி சூடு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசியதாகவும் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva