புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (16:45 IST)

வயிறு எரிகிறது, அதிர்ச்சி அளிக்கின்றது: ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசிய குஷ்பு!

Kushboo
பால் விலை உயர்வு வயிறு எரிகிறது என்றும் சொத்து வரி உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் பாஜகவால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் மின் கட்டணம், பால்விலை, சொத்து வரி ஆகியவை உயர்ந்துள்ள நிலையில் உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது 
 
அந்த வகையில் அடையாறு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கலந்துகொண்டார். அதில் அவர் பேசியபோது பால் விலை உயர்வை கேட்கும் போது வயிறு எரிகிறது, சொத்து வரி உயர்வை கேட்கும்போது அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா? 
 
முதலமைச்சர் தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை என நினைக்கிறேன். அவர் எழுதிக் கொடுத்ததை  தான் படிப்பது வழக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார். மழைக்காலத்தில் பொது மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி பயணம் செய்கிறார்கள் என்றும் இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் என்னை கூட மிக மோசமாக பேசினார்கள் என்றும் அவர் சொன்னார்
 
தமிழ் தமிழ் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் பிரதமர் மோடி தான் உலகம் முழுவதும் தமிழின் பெருமையை எடுத்து விடுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran