இஸ்ரேலில் பரவத் தொடங்கியது கொரோனா!!

Arun Prasath| Last Modified வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (19:56 IST)
இஸ்ரேல் நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதிவேகமாக மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. கிட்ட தட்ட 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது.
கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே, 2,236 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு 75,465 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே நேற்று முந்தினம் ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :