குறைய தொடங்கியது கொரோனா வைரஸ்; சீன அரசு

Arun Prasath| Last Modified வியாழன், 20 பிப்ரவரி 2020 (17:41 IST)
கொரோனா வைரஸ் பரவி வருவது குறைந்து வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டத்தட்ட 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவால் இதுவரை 2118 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹூபெய் மாகாணத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முந்தினம் கொரோனா வைரஸால் 1749 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.

ஆனால் நேற்று 394 பேர் மட்டுமே புதிதாக பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக அந்நாட்டு சீனாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது கணிசமாக குறைந்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :