1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (18:45 IST)

வர்த்தகத்தை சீரமைக்க சீனா கொரோனா குறித்த பொய் தகவல் வெளியிட்டதா?

உலகை நம்ப வைக்கும் நோக்கில், கொரோனா வைரஸ் தன்மை குறித்த பொய்யான புள்ளிவிவரங்களை சீனா வெளியிடுவதாக கூறப்படுகிறது. 
 
சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ், கிட்டத்தட்ட 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவால் இதுவரை 2118 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
ஹூபெய் மாகாணத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முந்தினம் கொரோனா வைரஸால் 1749 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 
 
ஆனால் நேற்று 394 பேர் மட்டுமே புதிதாக பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக அந்நாட்டு சீனாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது கணிசமாக குறைந்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 
ஆனால் இது பொய்யான தகவல், உலகை நம்ப வைக்கும் நோக்கில், கொரோனா வைரஸ் தன்மை குறித்த பொய்யான புள்ளிவிவரங்களை சீனா வெளியிடுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சீனா தனது வர்த்தகத்தை சரியாக்கிக்கொள்ள இந்த தகவல் வெளியிட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. 
 
இதற்கேற்ப முடங்கியுள்ள வர்த்தகத்தை சீரமைக்குமாறு சீன நிறுவனங்களுக்கு பிரதமர் லீ கெகியாங் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.